தமிழகத்தில் தொடருது பனிமூட்டம்! நீலகிரி, கோவை மாவட்டங்களில் உறைபனி ஏற்படும் அபாயம்!

 
பனிமூட்டம்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பனி மூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மார்கழி மாதம் முடிந்த நிலையில், பனி குறையும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், அதிகாலையில்  நடுங்கும் குளிரால் அவதிபட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தி பனி மூட்டத்தினால், ரயில்கள் தாமதமாகவும், விமானங்களில் சில ரத்து செய்யப்படும் நிலையில் தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் பகல் பொழுதுகளில் வறண்ட வானிலையே நிலவி வந்தாலும், வெயில் ஏறும் வரை  பனிமூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் எனவும்,மற்றமாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பனிமூட்டம்

அதே நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கவேண்டும். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது எனவும் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் ஊட்டியில் உறைபனி காரணமாக பனி போர்த்திய புல்வெளிகள்,  வீட்டை விட்டும் வெளியில் வரமுடியாத அளவு 0 டிகிரி செல்சியசாக வானிலை நிலவுகிறது.இதனால் அங்கு வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைந்து விடுவதால் அங்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பனிமூட்டம்

அடுத்து வரும் சில நாட்களும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக  30 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக  21 டிகிரி செல்சியசும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web