இத்தனைக் கசப்பா?! 2022ல் தமிழகம்.. ஒரு பார்வை!

 
செம!! இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்!!மத்திய அரசு பெருமிதம்!!

கொரோனாவுக்கு பிறகான வாழ்க்கை பலருக்கும் வசப்படாத நிலையில், மீண்டும் இன்னொரு புதுவகையான உருமாறிய கொரோனா தொற்று பரவல் பயமுறுத்தி வருகிறது. நேற்றுறுடன் 2022ம் ஆண்டு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இன்று முதல் இன்னொரு புத்தம் புதிய வருடம் துவங்குகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி துவங்கி சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், கேஸ் சிலிண்டர், பால், தயிர், நெய், காய்கறிகள் என விலைவாசி உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிராம் ரூ.5000யைக் கடந்து புதிய உச்சம் பெற்றுள்ளது.

ஒரு ரீவைண்ட் பார்வை 2022 தமிழகத்தில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அசைப்போடலாம் வாங்க..

2022ல் வழங்கப்பட்ட தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள், புகார்கள் தெரிவிக்கப்பட்டன. பொருட்களின் தரம் , எடை குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஆண்டின் தொடக்கமே தமிழக அரசுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்து. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின இளைஞர் கோகுல்ராஜ்  2015ல்   கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் 2022, மார்ச் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

2022

மார்ச் 24ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக  வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.  தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க  துபாய் நாட்டிற்கு  அரசு முறை பயணம் செய்தார். 2021 பிப்ரவரியில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. 

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் ஆலயத்தில் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற தேர்த்திருவிழாவில் தேரின் மேல் பகுதியை உரசியதில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அத்துடன் சாலையில் தேங்கி இருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில், ஒவ்வொரு ஆண்டும் குருபூஜையில் பல்லக்கு தூக்கும் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்த போதிலும் வழக்கம் போல் மே 22ம் தேதி பட்டின பிரவேசம் நடைபெற்றது.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தொடர்ந்து 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.சர்வதேச செஸ்  ஒலிம்பியாட் போட்டிகள்  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது.  ஒலிம்பிக்கிற்கு இணையான இந்தப் போட்டிகள் முதன் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த  12ம் வகுப்பு  மாணவி ஸ்ரீமதி  பள்ளிவளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். மாணவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என பெற்றோர் சந்தேகப்பட்ட நிலையில் , அங்கு போராட்டம் வெடித்து பெரும் கலவரம் உருவானது.  இதனையடுத்து இந்த வழக்கு  ஜூலை 17ம் தேதி  சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. 

2022
செப்டம்பரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தியின்  3, 570 கிலோ மீட்டர் பயணமான பாரத் ஜோடோ யாத்திரை  முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.  தற்போது 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில்  யாத்திரை மூலம் ராகுல் காந்தி மக்களை சந்தித்து வருகிறார்.

செப்டம்பரில் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டிலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.  இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரும் ஆறு மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அக்டோபரில் அரசு பேருந்துகளில்  பெண்களின் இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை என திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அக்டோபர் 16ல் அறிக்கை தாக்கல் செய்தது. அதில்  ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியுள்ளது 

கோவையில்  அக்டோபர் 23 ல் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேரறிவாளனை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  மற்ற ஆறு பேரும் நவம்பர்  11ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.  

கால் பந்தாட்ட வீராங்கனை  பிரியாவுக்கு, பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், வலது கால் முட்டியில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில், இரத்த நாளம் பாதிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 15ம் தேதி மாணவி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.  ரத்த ஓட்டம் இல்லாததால் பிரியாவின் வலது கால் அகற்றப்பட்ட நிலையில் பிரியாவுக்கு உயிர் சிகிச்சை

அளிக்கப்பட்டபோது,  மருத்துவர்கள் கட்டு கட்டுவதில் செய்த கவன குறைவு காரணமாக ரத்த ஓட்டம் நின்றது தெரிய வந்தது. முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின்  டிசம்பர் 14ம் தேதி இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web