எகிறியது தங்கம் விலை! சவரனுக்கு 42,000யைக் கடந்தது! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 அதிகரித்து, சவரனுக்கு ரூ.42,000யைத் தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,2601க்கும்,  சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.90 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.74,900க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5200யைத் தாண்டியது. நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான்.

நேற்றைய விலை நிலவரப்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,221க்கும்,  சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,768க்கும் விற்பனை செய்யப்பட்டடது. தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக இருக்கும் தங்கம் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. நடுத்தர மக்கள் இனி நம்மால் தங்கத்த வாங்கவே முடியாதோ, கண்ணால தான் பார்க்கணும் என புலம்புவதை கேட்க முடிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!
அதிலும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினா போதும்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web