டிசம்பர் 7ம் தேதி ஆதாரை புதுப்பிக்க சிறப்பு முகாம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவில் மத்திய மாநில அரசு திட்டங்களை பெற்றிட ஆதார் அவசியமாகிறது. ஆதாரை வங்கிக்கணக்கு, பான் எண், ரேஷன் கார்டு , லைசென்ஸ், பாஸ்போர்ட் அனைத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை

அதன்படி  ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள்  அடையாள சான்று மற்றும் முகவரி சான்று  இவைகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில்   வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம்  இவைகளுடன் புதுப்பிக்க கட்டணம் ரூ.50  ம் சேர்த்து  அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தினை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் செல்போன்
ஆதார் புதுப்பிக்கும் பணிகளுக்காக தமிழகத்தில் பகுதி வாரியாக கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்களை  ஏற்பாடு செய்துள்ளது.  முதற்கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தில் கடகத்துர், கரகத அள்ளி, கூத்தப்பாடி, சின்னாங்குப்பம் ஆகிய 4 கிராமங்களில் டிசம்பர்  7ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அத்துடன் இதற்கான ஆவணங்களை தவறாது எடுத்துக் கொண்டு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web