ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பார்வையாளர் பலி! திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் சோகம்!

 
அரவிந்த்

திருச்சி மாவட்டத்தில் பெரிய சூரியூரில் இன்று காலை மக்களின் பலத்த கரகோஷத்துடன் ஜல்லிக்கட்டு போட்டு துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 


திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் இரண்டாவது நாள், நற்கடல் குடிகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா நடைப்பெறும். கோவில் திருவிழாவையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், திருச்சியில் இருந்து மட்டுமல்லாமல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சுமார் 600 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டன. 400 மாடிபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், வாடிசாலில் இருந்து கோயில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சூரியூர் ஜல்லிக்கட்டு

இந்நிலையில், மாடு பிடிக்கும் பகுதியில் நின்றிருந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற வாலிபரை காளை முட்டியது. காளை முட்டியதில் பலத்த காயமடைந்த அரவிந்துக்கு உடனடியாக அங்கே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.  

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் 10 காளைகளைப் பிடித்து முதலிடத்திலும், திருவெறும்பூரை சேர்ந்த மாரி 9 காளைகளைப் பிடித்து 2ம் இடத்திலும் உள்ளனர். காளைகள் முட்டியதில் இதுவரையில் 32 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web