கேமிராவுக்கு ஸ்பிரே.. ரோடு முழுக்க பணம்.. சேசிங் செய்து கொள்ளையர்களைப் பிடித்த போலீசார்!

 
சிசிடிவி

வங்கி ஏடிஎம் ஒன்றில் இருந்த சிசிடிவி கேமிராவுக்கு ஸ்ப்ரே அடித்து அதன் பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கோரண்ட்லா பகுதியில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் துரத்திப் பிடித்தனர். கோரண்ட்லா பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் 4 பேர், ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஸ்பிரே அடித்தனர். அதன் பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 19.50 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றிருந்த பைகளில் நிரப்பி எடுத்து கொண்டு வெளியில் சென்றனர்.


ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு இது குறித்த தகவல் அளித்தனர். பணத்துடன் கொள்ளையர்கள் நான்கு பேர் வெளியில் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்களைப் பார்த்தவுடன் போலீசார் அவர்களை விரட்டிப் பிடிக்க சென்றனர்.

அப்போது கொள்ளையர்கள் பணப் பையை ரோட்டில் வீசி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் பையில் இருந்த பணம் சாலையில் சிதறி காற்றில் பறக்க துவங்கியது. கொள்ளையர்கள் நான்கு பேரையும் மடக்கி பிடித்த போலீசார் சாலையில் சிதறி காற்றில் பறந்த பணம் முழுவதையும்  சேகரித்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

Telangana

சினிமா பாணியில் நடைபெற்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கை தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web