இலங்கை கடற்படையினர் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

 
மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு புறம் பொருளாதாரத்தில் படு பாதாளத்திற்குள் வீழ்ந்திருந்த இலங்கைக்கு அதிகளவில் முதல் ஆளாய் உதவிக்கரம் நீட்டியது இந்தியா. ஆனாலும், தமிழக மீனவர்களை நட்புடன் இலங்கை கடற்படையினர் பார்ப்பதேயில்லை.

மீனவர்கள் விடுதலை

பல சமயங்களில், எல்லை தாண்டிச் செல்லவில்லை என்று தமிழக  மீனவர்கள் கூறியும் கூட, அடாவடியாக தமிழக  மீனவர்கள் கைது செய்யப்படும் போக்கு நிலவுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி காரைக்கால் அடுத்த மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன் பிறகு, கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். தமிழக மீனவர்களை ஆறு நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தர விட்டது பருத்தித் துறை நீதிமன்றம்.

படகு

இந்நிலையில் மீண்டும் 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை கைது செய்து, அவர்களின் விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கழகங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர் என்று கடலோர பகுதியினர் விரக்தியுடன் உள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web