அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!!

 
பொன்முடி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது உடன்பிறந்த  சகோதரர்  மருத்துவர் தியாகராஜன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு வயது 65. இவரது மறைவுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன்  காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.

பொன்முடி

உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவருக்கு ஆறுதலை கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்." என முதல்வர் பதிவிட்டுள்ளார். பொன்முடியின் சகோதரர்  தியாகராஜன்.  சிறுநீரக சிறப்பு மருத்துவராக இருந்த இவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து  தியாகராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

rip

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி   இன்று அதிகாலை 3 மணி உயிரிழந்தார். மறைந்த தியாகராஜனுக்கு மனைவி பத்மினி,  2 மகன்கள் திலீபன், சிட்டிபாபு .  அவரது உடல் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web