அடுத்த 5 நாட்களுக்கு கவனமா இருங்க மக்களே!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
மழை

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில்  இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில்  நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web