மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!! ஆசிரியர் தேங்காய் பறிக்க சொன்னதால் விபரீதம்!!

தமிழகத்தில் கல்வி நிலையங்களில் மாணவர்களின் அட்டகாசங்கள், அலப்பறைகள் அதனால் விளையும் விபரீதங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தனியாா் தொழில்பயிற்சி நிலைய மாணவர் உயிரிழந்தார். பண்ருட்டி வாணியம் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவருடைய மகன் 17 வயது அரசு . அரசு பண்ருட்டியில் உள்ள தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.
இங்கு, திருத்துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். பிரபாகரன் மாலை வகுப்பு முடிந்தவுடன் அரசு மற்றும் ஆதி இரு மாணவர்களையும் ஒறையூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு அழைத்து சென்று தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச் சொன்னார். கீழே விழுந்த தேங்காயை எடுத்துக்கொண்டிருந்த மாணவா் அரசு, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இந்நிலையில், மாணவரின் உறவினா்கள் சுமாா் 50 ,பேர் இழப்பீடு கேட்டு தனியாா் தொழில்பயிற்சி நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னர் தொழில் பயிற்சி நிலைய நிா்வாகிகள், கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் மற்றும் மாணவரின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!