விடுதி அறையில் மாணவன் தற்கொலை! தேர்வுகளால் தொடரும் சோகம்!

 
ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

அதிகரிக்கும் தேர்வு கெடுபிடிகளால், மாணவர்கள் அதிகளவில் மன அழுத்தத்தில் உள்ளனர். இதனைக் களைவதற்கு அரசும், கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் ஒருமித்து ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பொறியியல் தேர்வினை எதிர்கொள்வதற்காக தயாராகும் விதத்தில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவன் பொறியியல் படிக்க தயார் செய்து வரும் நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வில் தோல்வி அடைந்தான்.  

தற்கொலை

அதன் பிறகு விடுதி அமைந்திருக்கும் பகுதியிலேயே ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வகுப்புக்களுக்கு செல்லவில்லை என பயிற்சி தலைமையாளர் தெரிவித்துள்ளார். நேற்று முழுவதும் அவரது அறையின் கதவு திறக்கப்படவே இல்லை இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான். அவரது அறையை சோதனை செய்த போலீசார் தற்கொலை குறித்து எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாணவரின் தற்கொலைக்கான  காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 

போலீஸ்
மேலும், மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 2022ல் மட்டும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்செய்யும்  மாணவர்கள் 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web