வாரிசு படம் ரிலீஸில் சிக்கல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
வாரிசு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, புத்தக கண்காட்சி, பொருட்காட்சி, மார்கழி பஜனை, பொங்கல் விடுமுறை, நீட் தேர்வு ரத்து, அரசியல் கேலி கூத்துகள் என அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி, பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித், விஜய் படங்களில் எந்த படம் டாப்பு என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

ஆரம்பம் முதலே நம் தினமாலை இணையதளத்தில், சினிமா விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்கிற உறுதியோடு அதனால் தாம் இருந்து வருகிறோம். அடுத்த தலைமுறை இதிலிருந்து மீள வேண்டும். தற்போது அஜித் நடித்திருக்கும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில், விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சியின் டைரக்‌ஷனில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று முதல் ஆளாக அறிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி  வந்த வாரிசு படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

வாரிசு

தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் அதே நாளில் களமிறங்க இருக்கிறது.

Varisu

இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பு பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பொங்கல் தினத்தன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் முன்னர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி இனிமேல் பண்டிகை காலத்தில் வெளியாகும் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Varisu

வாரிசு படத்தை 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது, அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியிட திட்டமிட்டிருந்ததை நினைத்து ஏற்கனவே தயாரிப்பாளர் கவலையில் இருந்துவந்த நிலையில் தற்போது லுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் வெளியிட்ட அறிக்கை அவரை மேலும் கவலையடைய செய்திருக்கிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web