ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!! ரயில் பயணிகளே குறிச்சிக்கோங்க!!

 
பாம்பன் பாலம்

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம் உலக பிரசித்தி பெற்றது. கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் மேலே ரயில் பாதை, சாலை , கீழே கப்பலுக்கான பாதை என ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.  100 ஆண்டுகள்  கடந்தாலும் அதன் உறுதி தன்மை குறையாமல் வந்துள்ளது இந்த பாலத்தின் வழியே கப்பல்கள் செல்வதற்காக தூக்குப்பாலம் தூக்கி நிறுத்தப்படும். தற்போது இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.  

பாம்பன் பாலம்

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை - ராமேஸ்வரம் ரயில் மண்டபம் இடையேயான ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பாம்பன் துக்கு பாலத்தில் பயணிகள் இல்லமால் சோதனை ஓட்டம் ரயிலை இயக்கப்பட்டு வருகிறது.  சோதனை முடிவில் கிடைக்கும் அறிக்கையின் நிலவரத்தின் அடிப்படையில்  அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய  சென்னையில் இருந்து ஐஐடி வல்லுனர்குழு ராமேஸ்வரம் விரைந்துள்ளது. 

இதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்:

பாம்பன் பாலம்
நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் எண்.22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண் 22622 கன்னியாகுமரி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து 

ரயில் எண்.06652 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு செய்யப்படாத எஸ்பிஎல் ரயில்.ரயில் எண். 06780 ராமேஸ்வரம் - மதுரை எஸ்பிஎல் ரயில் இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web