சுனில் கவாஸ்கர் தாயார் காலமானார்..!! பிரபலங்கள் இரங்கல்!!

 
கவாஸ்கர்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இவரது வீடு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது தாயார் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தமது ஆட்டத்தால் கட்டிப் போட்டவர் கவாஸ்கர். இவர் உலகின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். கவாஸ்கர் இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 10122 ரன்களை குவித்தவர்.

கவாஸ்கர்

அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 236 ரன்கள் பெற்றவர். இவர் 34 சதங்களையும் மற்றும் 45 அரை சதங்களையும் விளாசித் தள்ளியுள்ளார். இவர் ஆட்டங்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. 2009ல் கவாஸ்கர்  ஐசிசியின் ஹால் ஆஃப் பேமராக அறிவிக்கப்பட்டார். சுனில் கவாஸ்கர்  தாயார்   மீனாள் கடந்த சில தினங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாட்டால்  அவதிப்பட்டு வந்தார்.

rip

அவருக்கு வயது 95.இவர்  வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுனில் கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில்  வர்ணனையாளராக இருந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக நாடு திரும்பினார். இவரது இழப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web