ஹேக்கர்களுக்கு சூப்பர் ஆபர்!! ரூ1லட்சம் ரொக்கப் பரிசு!!

 
மின் இணைப்பு ஆதார்

காவல்துறையில் தற்போது குற்றத் தடுப்பு நடவடிக்கையில்  சிசிடிவி மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஆனால் சிசிடிவி  காட்சிகளில் சரியான படி முகங்களை அடையாளம் காணமுடியாமல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கேமரா சிசிடிவி

அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எளிதாக அடையாளம் காண்பவர்களுக்கு  ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகின்றன. இதனைக் களையவே காவல்துறை இந்த அதிரடி  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலீஸ்

இரு கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டியில் 3  பேர் கொண்ட குழுவாக கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்குபெற விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொழில்நுட்பங்களில் திறமைசாலியாக இருப்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.  டிசம்பர் 10 ம் தேதி ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web