மீண்டும் சூர்யா , சுதா கோங்குரா கூட்டணி!! விரைவில் திரையில் ரத்தன் டாடா வாழ்க்கை!!

 
சூர்யா சுதா கோங்குரா

தமிழ் திரையுலகில் தனக்கென தனிப்பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் முண்ணனி கதாநாயகன் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏர்டெக்கான் நிறுவனர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படமாக அமைந்த இந்த படத்தி இயக்குனர் சுதா கொங்கரா பிரம்மாண்டமாக மக்களின் மனம் கவரும் வகையில் செதுக்கியிருந்தார்.  இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

 சூர்யா
இதே கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. அதன்படி,  டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை அடுத்ததாக  சுதா கொங்கரா திரைப்படமாக எடுக்க இருக்கிறார். அதற்கான தொடக்கப்பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில் அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

இதுல அரசியல் செய்யாதீங்க…! அன்புமணிக்கு சூர்யா செம பதில்!!

இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தொடங்கப்படும் என இயக்குநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த தகவல்கள் சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.இது தவிர நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web