பாஜக பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா அதிரடி நீக்கம்!

 
திருச்சி சூர்யா சிவா

திமுகவின் சிறந்த பேச்சாளர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவராக இருப்பவர் டெய்சி சரண். இருவருக்கும் இடையே நடந்த சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் வைரலாக வெளியானதை தொடர்ந்து, சூர்யா சிவா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து இருவரிடமும் நேற்று திருப்பூரில் விசாரணை நடத்தப்பட் டது. அதில், 'இருவரும் இனி அக்கா  தம்பியாக செயல்படுவோம்' என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்...  சுமுகமாக செல்ல இருவரும் விருப்பப்பட்டாலும், அந்த தொலைபேசி உரை யாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும்.

திருச்சி சூர்யா சிவா

பெண்களை தெய்வ மாக போற்றுவது பாஜ. தமிழகத்தில் உள்ள சில திராவிடக்கட்சிகளை போல பாஜவும் பெண்க ளின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும், காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம்.

பெண்களை பொது மேடை களில் கொச்சைப்படுத்துபவர், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் போன்றோ ரின் கூடாரமாக திமுக செயல்படு கிறது. பெண்களை இழிவுபடுத்து வகையில் பாஜக ஒருபோதும் ஏற்காது. சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை நான் ஏற்க மறுக்கின்றேன். ஆதலால், சூர்யா சிவா, கட்சியின் நற்பெ யருக்கு களங்கம் விளை விக்கும் செயலில் ஈடு பட்டதை அவர் ஒப்புக்கொண்டதால், அனைத்து அவர்கட்சியின் பொறுப்பில் இருந்தும் 6 மாதம் நீக்கப்படுகிறார். கட்சியின் தொண் டனாக அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கையில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும். இவ்வாறு அவர் கூறியள்ளார்.

திருச்சி சூர்யா சிவா

இதனிடையே கட்சியினர் சிலரிடம் பேசினோம் அவர் திமுகவில் இருக்கும் பொழுதே அப்படித்தான் நாய் வாலை நிமிர்த்த முடியாது. பாரம்பர்ய கட்சியில் சிலரை சேர்க்க வேண்டும் என்றால் சிலரை கலந்து ஆலோசிக்க வேண்டும் இது அண்ணாமலைக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்கிறார்கள்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web