டாஸ்மாக் ஊழியர்களே உஷார்!! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

 
டாஸ்மாக் மது எலைட்

தமிழகத்தில் மதுபானக்கடைகள் அரசு சார்பில்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மதுபானக்கடைகளில் அரசு சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியில் இருந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான கடைகளில் வெளி நபர்களை பணியில் அமர்த்தியது குறித்து தொடர்ந்து புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன. இது குறித்து  டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

இது குறித்த  சுற்றறிக்கை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றிக்கையில், கடைப் பணியாளர்கள் பணிக்கு வரும்போது  மாவட்ட மேலாளரின் அனுமதி பெற  வேண்டும் . ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்று  பணி மேற்கொள்ளுதல், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் செல்லுதல், சங்கங்களின், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்தல் இவைகளினால் கடைகளில் சரிவர நிர்வாகம் நடைபெறவில்லை என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!
சீரான இடைவெளியில்  மதுபான சில்லறை விற்பனை கடைகளை ஆய்வு செய்தபொழுது இவை நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்துடன்  வெளிநபர்களை கடைபணிகளில் ஈடுபடுத்துவதும் தெரியவருகிறது. இதன்படி அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்வெளியிடப்பட்டுள்ளன. கடைப் பணியாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கோ, டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கோ ஏதேனும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் மேலாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  சுற்றறிக்கையினை இருப்புக் கோப்பில் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web