டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக தகுதி, துறை வாரியாக பல்வேறு போட்டித்தேர்வுகள்  மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குரூப் 1 மற்றும் 2 குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.  

டிஎன்பிஎஸ்சி

அத்துடன் மொத்த  காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் 1,750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிபணியிடங்களை அதிகரிக்கவும் தொடர்ந்து  தேர்வாணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை  தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  

குரூப் 1

அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியிடப்படும். முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மை தேர்வு ஜூலை 2024ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மை தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை தேர்வர்கள் கீழே உள்ள நேரடி லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web