டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!! பதிவிறக்கம் செய்வது எப்படி?

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று கட் ஆப் வகையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குரூப் 3 தேர்வுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இதனை தேர்வர்கல் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப் 3 க்கான எழுத்து தேர்வுகள் ஜனவரி 28ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது காலை 9.30 மணி முதல்  பிற்பகல்  12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்3 தேர்வுகள் மூலம்  Junior Inspector மற்றும் Store-Keeper, Grade-II பணியிடங்கள் நிரப்பப்படும். 

டிஎன்பிஎஸ்சி
தேர்வு எழுத  இருக்கும் விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை தேர்வாணையத்தின்‌ அதிகாரப்பூர்வ இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==  இவைகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட வேண்டும். அதன்பிறகு தேர்வுக்கூட நுழைவு சீட்டினை  பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web