தை பிரதோஷம், தை வெள்ளி, தை அமாவாசை!! சதுரகிரியில் குவியும் பக்தர்கள்!! கட்டுப்பாடுகள் தீவிரம்!!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு அமைந்துள்ள சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி

அந்த வகையில் இன்று பிரதோஷம். நாளை மறுநாள் தை அமாவாசை. இதற்காக இப்போதிருந்தே சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் தொடர்ந்து நாட்களுக்கு அதாவது ஜனவரி 19 வியாழக்கிழமை முதல் 22ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வரை தினத்தில் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

சதுரகிரி

தை அமாவாசை, தை வெள்ளி, தை பிரதோஷம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும்.இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
அத்துடன் கோவிலுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 
கோவிலுக்கு வருபவர்கள் ஓடைகளில் குளிக்கக் கூடாது.
இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது. 
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது என வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web