வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!! இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மற்றும் தமிழகம்  முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றவர்கள் மழையில் நனைந்த படியே வீடு திரும்பினர். அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையின் சில இடங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உ.பி கன மழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய  நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் கிழக்கில் நிலைகொண்டிருந்தது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை கிண்டி, ஆலந்தூர், மெரினா கடற்கரை, தி நகர், ராயப்பேட்டை, விமான நிலையம், ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, நூங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம்,சைதாப்பேட்டை, அடையாறு, பிராட்வே, திருவன்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், வண்டலூர், பெங்களத்தூர், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில்  உட்பட சென்னையின்  பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

மழை

நேற்று டிசம்பர் 25ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை  13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web