மீண்டும் சிதறுகிறதா தமிழக காங்கிரஸ்! அழகிரியின் ஆட்டம் காலி?!

 
அழகிரி

அரசியல் சதுரங்கம் என்கிறார்கள். தற்போதைய காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை அது சதுரங்க விளையாட்டு எல்லாம் கிடையாது. யார் எப்படி வேணா விளையாடிக்கோங்க... நாங்க எங்களுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருப்போம் என்று இரண்டு பேர் விளையாடக் கூடிய சதுரங்க விளையாட்டை இருபது முப்பது பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரே அணியைச் சேர்ந்த 30 பேருமே எதிரும் புதிருமா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்பான எதிர்கட்சியாக மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருஷங்கள் பல கடந்தாச்சு. ஊர் கூடி இழுத்தா தானே தேரு? மன்னவரு மட்டும் ஊர் முழுக்க நடந்து போனா அதுக்கு என்ன பேரு? அப்படி தான் இருக்கு நிலம.. 

சரி.. குமாரு ஏதாவது தகவல் சொல்வாருன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தப்போ சரியா உள்ளே நுழைஞ்சாரு குமாரு.

என்ன குமாரு தலைநகர் பக்கம் ஏக களேபரமா இருக்கு?

ஆமா சார்லஸ்... நானும் வேடிக்கை பார்த்துட்டு தான் இருக்கேன். பொதுவா மாநில கட்சிகள்ல தான் இப்படி அடிதடி ரசாபாசமான பேச்சுக்கள் இருக்கும். ஆனா இப்போ தேசிய கட்சியிலேயே கடுப்பாகி கைமீறி போகுதுன்னு பேசிக்கிறாங்க,

என்ன காரணம்னு சொல்றாங்க ?

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்.

யாருக்கு கொண்டாட்டம்? யாருக்கு திண்டாட்டம்? அதையும் நீயே சொல்லிடேன். 

நான் சொல்லாம வேற யாரு சொல்வாங்க சார்லஸ்? மொதல்ல தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியோட பிரச்சனைக்கு வருவோம். தற்போதைய தலைவர் அழகிரி பதவி முடிந்து பல மாமாங்கம் ஆகப் போகுது. காங்கிரஸ்ல சீனியர்களுக்கா பஞ்சம். அங்க தான் பிரச்சனையே ஆரம்பம். இளம் தலைவராகவும் அதே நேரத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் சின்னவர்களை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சீனியர்கள், தங்களுடைய உறவினர்களுக்கு பதவி வேண்டும்னு காவடி தூக்குறாங்க. அது ஒருபுறம் இருக்க வசதியானவங்களும் வசதியை ஏற்படுத்திக்கிட்டவங்களும் எப்படியாவது பதவிக்கு வந்துடணும்னு நினைக்கிறாங்க

கார்த்தி
அப்போ அழகிரி ஆட்டம் காலியாகுதா?!

அப்படித் தான் சார்லஸ் பேசிக்கிறாங்க, ஜோதா யாத்ரா ஜோரா ஒரு பக்கம் போய்கிட்டு இருக்கையில இப்படி இவங்க பதவிக்கு அடிச்சுக்கலமா?

சண்டைனா சட்டை கிழியறது வாடிக்கை தானே சார்லஸ்? இதுல என்ன சுவாரஸ்யமான விஷயம்னா ஆளாளுக்கு முட்டி மோத தனக்கு விசுவாசமான ஒரு ஆளை உள்ளே தள்ள ஆளும் தலைவர் மூவ் செய்து கிட்டு இருக்காராம்.

எரியுற வீட்ல பிடிங்கினது ஆதாயம்னு சொல்லு!

ஆமாம்... ஆமாம் எது எப்படியோ யாத்ரா முடிந்தவுடனே புதிய தலைவர் யாருன்னு உனக்கு தெரிச்சுடும். ஒரு வேளை நக்மாவை நியமனம் செய்யச் சொல்லி பரிந்துரை கடிதம் கொடுக்கலாமா ஹி ஹி ஹி..

அதுசரி ஒன்சைடு கோல் மாதிரி இருக்கே. ஒரே கட்சிய பத்தி மட்டும் சொல்லிகிட்டு கால்பந்தாட்ட போட்டி நடக்குற சீசன் இல்ல அதான்  சேற்றினில் மலர்ந்த செந்தாமரையேனு ஹம்மிங் அதகளப்பட அதே அதே தான்னு சார்லஸ் உற்சாகமாயிட்டாரு...

ம் ம் ம் வர்றேன் இரு.. காங்கிரஸ்ல இப்படி களேபரம் நடக்கறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. ஆனா சத்தமில்லாம ஒரு முக்கியமான விஷயத்தை மொதல்ல முடிப்போம்னு ஐ.பிஎஸ் அதிகாரி திட்டம் போட்ட  அதே நாள்ல வெளியே இருந்து புதிதாக கட்சியில் வந்தவங்க இருவரும் வசை பாடிய ஆடியோ டேப் எப்படி அதே நாள்ல வெளியாச்சு? அது தான் மில்லயன் டாலர் கேள்விக்குறி? 

வாசன்

அதவிடுங்க அப்படி என்ன முக்கிய கூட்டம்?  யார் அந்த தலைவர்கள்?

அதிகாரி அதில் முப்பெரும் தலைவர்கள் கலந்துக்க ஏற்பாடு செய்திருந்தாரு. இந்த களேபரத்தால கைவிட்டு போச்சாம் அந்த கூட்டம். வேற என்ன சார்லஸ் ச்சே கூட்டம் கூடியிருந்தா இன்னும் நிறைய தகவல் கிடைச்சு இருக்கும்

கிடைக்கணும்கறது கிடைக்காம போகாது நடக்கணுங்கறது நடக்காம போகாது. நடந்தால் விஷயம் வெளியே தானே வந்தாகணும். அப்ப பேசிக்கிட்டா போச்சு

அரசியல் சதுரங்க வேட்டை ஆரம்பமாகிடுச்சுனு சொல்லுங்க.

அதே தான் சார்லஸ் இனிமே அடிக்கடி சந்திப்போம்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web