தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 
ஸ்டாலின் அவ்வை

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன்  உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் காலமானது இலக்கிய அன்பர்களை பெரும் சோகத்துக்குள்ளாக்கியது. 85 வயதான திரு.அவ்வை நடராஜனுக்கு கடந்த 2010ல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில நாட்களாக மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்தவர். மேலும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரிகளிலும் தமிழ் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.

அவ்வை நடராஜன்

இது தவிர தலைநகர் டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக மட்டுமின்றி அறிவிப்பாளராகவும் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு இலக்கிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள் , அரசியல்வாதிகள் பலரும் தமது இரங்கல் செய்தியை பதிவிட்டுவருகின்றனர்.

அவ்வை நடராஜன்

அய்யகோ! 
அறிஞர் அவ்வை நடராசன் மறைந்தாரே! 
தமிழ்ச்சங்கத்தின் ஏடொன்று எரிந்துபட்டதே 
அகிலம் தழுவி வீசிய தமிழ்த்தென்றல் 
தன் வீச்சையும் மூச்சையும் நிறுத்திவிட்டதே 
பட்டிமன்றம் பொட்டிழந்துவிட்டதே 
இனி என்னோடு தனித்தமிழில் உரையாட எவருளார்? 
பேசுதமிழ் உள்ளவரை 
உங்கள் பெருமை வாழும் பெருமை! என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web