டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு! நீதிமன்றம் பரிந்துரை!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் பண்டிகைகளைக் கொண்டாடும் போது எல்லாம் கோடிக்கணக்கில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை எகிறும். இந்த புத்தாண்டு தின விடுமுறை நாட்களில் ரூ.1000 கோடி அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனையானதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த தீபாவளி விடுமுறை நாட்களில் ரூ.600 கோடியை எகிறியது டாஸ்மாக் விற்பனை.

பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் மது அருந்தும் வீடியோக்கள் வாட்ஸ்-அப்களில் வலம் வருவது ஒரு பக்கம் என்றால், மாணவிகள் பேருந்துகளில் அமர்ந்து மது அருந்தும் கொடூர, அடுத்த தலைமுறையை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடினால் தான் என்ன? என்று பலரும் நொந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

ஆனாலும், அரசு டாஸ்மாக் வருவாயை பெரியளவில் நம்பிக் கொண்டிருக்கிறது. நியூ இயர் பார்ட்டி முடித்து விட்டு, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய படியே போக்குவரத்து காவலரிடம் சிக்கிய இளம் பெண், ஆமாம் குடிச்சுட்டு தான் வந்தேன். பைன் எல்லாம் கட்ட முடியாது. நானே ஓசியில குடிச்சேன்’ என்று பேசும் வீடியோக்கள் இன்று வரையில் இணையதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க ஐகோர்ட் மதுரை கிளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதே போல், மாணவர்கள், இளம்பெண்கள் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கும் பொருட்டு, மது விற்போர், வாங்குவோர், உபயோகப்படுத்துவோருக்கு தனியே உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்யவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

டாஸ்மாக்

முன்னர், நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது என்கிற நீதிமன்றத்தின் உத்தரவை, சமயோசிதமாக, தடுப்பு சுவர் கட்டி, டாஸ்மாக் கடையின் வாசலை பின்புறமாக மாற்றி, குறுக்கு வழியில் யோசித்த தமிழக அரசு, இந்த முறையாவது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த பரிந்துரையை ஏற்குமா? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web