6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
டாஸ்மாக் விடுமுறை

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைத் தீப திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற விழா இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கும் டாஸ்மாக் கடை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிசாலையில் உள்ள கடை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடிகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து மூட அம்மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web