தமிழுக்கு டாட்டா!! பாலிவுட்டுக்கு பறக்கும் ஜோதிகா!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

 
ஜோதிகா


 தமிழ் திரையுலகில் 90 களில் நட்சத்திர நாயகியாக தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை ஜோதிகா. இவர் 1998ல்  வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பிறகு  படத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.அவரது திருமணத்திற்கு பிறகு  ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சில வருடங்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழில் சில திரைப்படங்களை  தயாரித்தும், நடித்தும் வந்தார்.

இமயமலையில் மனதை கொள்ளை கொள்ளும் ஜோதிகா! வைரலாகும் இன்ஸ்டா!

தற்போது பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில்  ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்க, துஷார் ஹிராநந்தினி இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோதிகா மம்மூட்டி

 நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்திக்கு செல்வதால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.அத்துடன் மலையாளத்தில் உருவாகி வரும் காதல் திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web