இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோ கால்! கோயில் குருக்களைப் புரட்டியெடுத்த கணவன்!

 
கோவில் குருக்கள்

 இளம்பெண்ணுக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்த கோயில் குருக்களை, இன்றைய வாழ்க்கை முறையில் சின்னஞ்சிறு பள்ளிச் சிறுவன் முதல் வயதானவர்கள் வரை மொபைலில் தான் வாழ்க்கையே. இதனை என்ன தான் சரியான முறையில் பயன்படுத்தினாலும் சமூக வலைதளங்களில்  ஆபாச வீடியோக்கள், மர்ம கால்கள் என  நாளுக்கு நாள் ஆன்லைன் வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.  இதில் இளையதலைமுறையினர் மட்டுமல்லாது உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை தப்பவில்லை.  இதே போல் ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில் கோயில் குருக்கள் ஒருவர் முகம் தெரியாத இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்கிறார். எதிர் முனையில் தன்னை அழைப்பது யாரென தெரியாமலேயே அந்த பெண் அந்த வீடியோ காலை அட்டெண்ட் செய்து பேசியுள்ளார்.  

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

ஆனால் தவறான எண்ணத்தில் இருந்த அந்த குருக்கள், தான் கட்டியிருக்கும் வேட்டியை அவிழ்த்து விட்டார். பின்னர்  தன்னுடைய மர்ம இடத்தைக் காட்டி சில்மிஷம் செய்து காட்டினார். 
இதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து  வீடியோ காலை கட் செய்து விட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து விட்டார். அத்துடன் விடாமல் அதே பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கும் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பியுள்ளார் அந்தக் கோயில் குருக்கள்.  உடனே சற்றும் தாமதிக்காமல் அந்த பெண் தனது கணவரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். 

பெண்ணின் கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அந்த கோயில் குருக்கள் யாரென விசாரித்து  அவர் எங்கே  எந்த ஊரில் இருக்கிறார்? என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.  அவரை நேரில் சந்தித்து கோயில் குருக்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, அவர் செய்த தவற்றை அவர் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது தீயாகப் பரவி வருகிறது.பலரும் பலவிதமான கருத்துக்களை இதற்கு கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web