டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வை அறிவித்தார்!

 
சானியா

அடுத்த மாதம் துபாயில் நடைப்பெறும் போட்டியுடன் தான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (36) இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, உலகின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்து வந்துள்ளார். கடந்த 2003ம் வருடம் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற சானியா மிர்சா, இந்திய பெண்கள் டென்னிஸ், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டின் மீது அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்கவும் காரணமாக அமைந்துள்ளார். 

சானியா

2005ம் ஆண்டில் நடைபெற்ற WTA தொடரில், ஒற்றையர் பரிவில் பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். கடைசியாக, ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், முதல் சுற்றில் தோற்ற நிலையில் 2022 சீசனோடு ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.

இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அடுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது.

மகிழ்ச்சி!ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் சானியா மிர்சா !

மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார். மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார். முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web