கோர விபத்து!! காரும் , லாரியும் நேருக்கு நேர் மோதி 9 பேர் உடல் நசுங்கி பலி!!

 
விபத்து

மகாராஷ்டிராவில்  ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே  4 பெண்கள் உட்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர்.  

விபத்து

4 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளான்.  அக்கம்பக்கத்தினர் அவனை மருத்துவமனையில் அனுமதித்ததில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை , உயிரிழந்தத 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விபத்து
மேலும் இந்த விபத்து  குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை நடத்தப்பட்டதில் அதிகாலையில் பனிமூட்டம் மற்றும் தூக்கக் கலக்கத்தில் விபத்து நடைபெற்றிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால்  பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web