பயங்கர மோசடி!! 70% ஊழியர்கள் வேலைநீக்கம்!! பிரபல நிறுவனம் அதிரடி!!

 
பணிநீக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு உலக அளவில் சிறு நிறுவனம் தொடங்கி பெருநிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதனை சீரமைக்கும் வகையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் 10000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் வாரத்தில் மட்டும் பெரு நிறுவனங்களில் இருந்து சுமார் 30000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிநீக்கம்

அந்த வரிசையில் கார் பழுதுபார்க்கும் நிறுவனமான GoMechanic நிறுவனமும் தனது 70 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து GoMechanic இணை நிறுவனர் அமித் பாசின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிறுவனம் கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வணிகத்தை மறுசீரமைக்க நிர்வாகத் தலைமை முடிவு செய்துள்ளது . இதனால் இந்த பணிநீக்கம் தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் முதலீட்டில் செயல்படும் GoMechanic ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது நிதி கணக்குகளில் பல்வேறு சிக்கல்கள், முறைகேடுகள் காரணமாக தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. GoMechanic நிறுவனம் குர்கான் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு  தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து நிதி கணக்கில் ஏற்பட்ட மோசடிகளால் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தோல்வியை தழுவியது. இந்நிறுவனத்தின் சிஇஓ அமித் பாசின் தொழில்முனைவோராக, வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

கோ மெக்கானிக்

நிதி அறிக்கைகள் தொடர்பாகச் செய்த தவறுகளுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.  2022ல்  டைகர் குளோபல் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதிய முதலீட்டைத் திரட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் GoMechanic ஸ்டார்ட்அப் நிறுவனம் இறங்கியது. ஆனால் நிறுவன கணக்கில் இருக்கும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.  இந்த முதலீட்டுச் சுற்று இனி தொடராது எனவும், மற்ற முதலீட்டாளர்களின் ஆய்வில் அனைத்து கணக்குகளும், தணிக்கையும் போலி என கண்டறியப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலையில், வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த புதிய முதலீடுகள் கட்டாயம் தேவை .  

இந்தியாவில் இதேபோல் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிந்தால் தொடக்கத்தில் அதிகப்படியான சம்பளத்தைப் பெற்றுவிடலாம்.  சர்வதேச அளவில் முதலீட்டுச் சந்தைகள் பெரிதும்  பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மேலும் பலர் வேலையிழக்கும் அபாயமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web