பயங்கர விபத்து... அப்பளமாய் நொறுங்கிய சொகுசு பேருந்து! 10 பேர் பலி.. 40 பேர் படுகாயம்! முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு!

 
பேருந்து விபத்து

டிராக்குடன் மோதியதில் அப்பளமாய் நொறுங்கியது தனியார் சொகுசு பேருந்து. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சீரடிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகே உள்ள பதரே ஷிவார் அருகே தனியார் சொகுசு பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேராக மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல் நசுங்கி 7 பெண்கள் உட்பட 10 பேர் பலியானார்கள். 

Nashik

இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


போலீசாரின் விசாரணையில் சொகுசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. விபத்து எப்படி நேர்ந்தது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை. விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரது சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

 

From around the web