இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!! 46 பேர் பலி!! 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 
இந்தோனேசியா

இந்தோனேசியாவில்  மேற்கு ஜாவா மாகாணத்தில்  5.6 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!

மேலும் பலர் திறந்தவெளி மைதானங்களை தேடினர்.  இந்த நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுவரை பலி எண்ணிக்கை 46 பேர்.  300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் முற்றிலும் தடைபட்டது.

நிலநடுக்கம்

இதனால் ஏராளமான மக்கள்  இருளில் தவித்து வருகின்றனர். பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. 1000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரியில்  மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் பலியாகினர். 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web