பண்ணையில் பயங்கர தீவிபத்து!! துடிதுடித்து கருகிய 3700 கோழிகள்!!

 
தீவிபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி வேடப்பட்டியில் வசித்து வருபவர் 45 வயது  மாது . மாது அதே பகுதியில் கடந்த 2 வருடமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று நவம்பர் 22ம் தேதி 10 மணிக்கு  திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீவிபத்து

உடனே மாது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் உடனடியாக தீ மளமளவென பரவியதால்  கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

தீவிபத்து
தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.  இருந்த போதிலும் இந்த கோரதீவிபத்தில், பண்ணையில் இருந்த 3700 கோழி குஞ்சுகளும்  கருகி உயிரிழந்தன.  மின்கசிவால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web