திருப்பூரில் பயங்கர ஷாக் வீடியோ.. தமிழர்களை சேர்ந்து தாக்கிய வடக்கன்ஸ்!

 
வடஇந்தியன்

தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது என்று கூறி கொண்டிருந்த நாம் தான், வந்தோரை வாழ வைக்கிறோம். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக கன்னடர்களுக்கும், தமிழர்களுக்குமான யுத்தம் போல தமிழகமும் மாறி வருகிறதோ என்கிற அச்சம் எழுகிறது. எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதிப்புகள் வரும். அது நாள் வரையில் அண்ணன், தம்பிகளாக பழகி வந்தவர்களே, தமிழர்களின் இல்லத்தில் கல் எறிவதில் முதல் ஆளாக நின்று ஆச்சர்யபடுத்துவார்கள். அப்படியொரு நிலை, தமிழகத்தில் உருவாகி வருகிறது.

விஷயம் இது தான்.. தமிழகத்தைச் சேர்ந்த பின்னலாடை தொழிலாளி ஒருவரை வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரு விட்டு ஊரு வந்து’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ஆனால், அவர்களிடையே இருக்கிற ஒற்றுமை வியப்பானதல்லவா? அப்படி ஒன்று சேர்த்து துவைத்தெடுத்திருக்கிறார்கள்.


திருப்பூரில், அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணியாற்றி வருகின்றனர்.

இந்த பனியன் நிறுவனங்களில் தமிழர்களை விட, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் கடந்த 14-ம் தேதி பனியன் நிறுவனத்தில் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் டீ இடைவேளைக்கு வெளியே வந்துள்ளனர்.

Tiruppur

அருகே இருந்த பெட்டி கடையில் சிகரெட் புகைத்துள்ளனர். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 4 தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் வந்துள்ளனர். வடமாநில இளைஞர் தன் மீது சிகரெட் புகையை ஊதியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வடமாநில தொழிலாளியை 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதனை கண்ட வடமாநில தொழிலாளர்கள் 4 தமிழக இளைஞர்களையும் துரத்தி துரத்தி அடித்துள்ளனர். அந்த வழியாக 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வந்த நிலையில் தமிழக இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர். அதே போல் வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி சென்றுள்ளனர். யாரும் புகார் கொடுக்காத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

தாக்குதல்

இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, “பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில், சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த போது, வடமாநில தொழிலாளுக்கும், தமிழக தொழிலாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநிலத் தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web