திகிலூட்டும் வீடியோ!! உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள்!!

 
சீனா

சீனாவில் மீண்டும் கொரோனா மிகத் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. தினமும் கோடிக்கணக்கில் பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் சீனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2020 டிசம்பரில் தொடங்கிய கொரோனா காலகட்டம் முதல் சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.


இவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் தினமும் சுமார்  10 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவதாகவும்,  பலி எண்ணிக்கை  5000க்கும் அதிகரித்து வருவதாகவும்  லண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்து  சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனாவால் பலியானவர்கள் உடல்களை தகனம் செய்ய தகனமேடைகளுக்கு வெளியே மக்கள் இறந்த உடலுடன்  நீண்ட வரிசையில்  காத்துகிடக்கின்றனர். இது குறித்து  திகிலூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  சுகாதார நிபுணர் எரிக் பீகல்-டிங் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


இதில் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடலை தகனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறது. இந்தக் காட்சிகள் காண்பவர்களை உலுக்கி எடுத்து விடுகிறது. உங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்ய காத்திருக்காமல், ஒதுக்கப்பட்ட அந்த நேரங்களுக்கு அவர்களின் இறந்த உடலை கொண்டு செல்ல வேண்டும் என  வீடியோவுடன் டாங் டுவீட் செய்துள்ளார். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தில் இருந்து இந்த வீடியோ கசிந்துள்ளது. இந்த வீடியோவின் படி சீனாவின்   மொத்த மக்கள் தொகையில் சுமார் 17.56 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தகவலை  ஹாங்காங்கை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web