நள்ளிரவில் பயங்கரம்! கோர விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து! 2 பேர் பலி!

 
ஆம்னி விபத்து

தமிழகத்தில் தொடர் விடுமுறை தினங்கள் வருகிற நேரங்களில், அதிவேகத்தில் செல்கின்ற வாகனங்களினால் விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு செல்வது வாடிக்கை. இந்நிலையில், சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்றிரவு லாரி மீது மோதிய விபத்தில், ஆம்னி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறான வேகத்தில் சென்றுள்ளது. அப்போது உளுந்தூர்பேட்டை அருகே சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Ulundurpet

பலியான இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. படுகாயம் அடைந்தவர்களை அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடிப்போய் காடு வழியாக தப்பித்து சென்றுவிட்டனர்.

போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற அரசு பேருந்து மீது, முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த லாரி ஒன்று மோதியது. இதில் பேருந்து ஒரு பக்கமாக திரும்பி சாலையை அடைத்தது. அதோடு பேருந்தின் முன் பக்கத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

Ulundurpet

லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக வந்த பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த லாரியை பார்க்காமல் அதில் வேகமாக மோதி உள்ளார். இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பேருந்து ஒட்டுனர் மட்டும் லேசான காயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாரும் இந்த விபத்தில் பலியாகவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web