ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தேய்பிறை பஞ்சமி!! இப்படி வழிபாடு செய்து பாருங்க!!

 
வாராஹி

 ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினம் பஞ்சமியாக அனுசரிக்கப்படுகிறது. இதில் பௌர்ணமியை அடுத்த 5 வது தினம் தேய்பிறை பஞ்சமி. அம்பிகை சப்தகன்னியர்களில் ஒருவராக   வாராஹி அவதாரம் எடுத்து அசுரர்களை அழித்தவள். அதே போல் நம் வாழ்விலும் நம்மை எதிர்த்து வரும் துன்பங்கள், இன்னல்களை துவம்சம் செய்து நம்மை காப்பாள் என்பது ஐதீகம்.

வாராஹியை இந்த பஞ்சமி திதியில்  வழிபட  எதிரிகளிடம் இருந்து மட்டுமல்ல, மறைமுகமாக நம்மை எதிரியாக கருதுபவர்களிடம் இருந்தும் கூட நம்மை காத்து அருள்வாள். அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் சந்தித்து வரும் இன்னல்கள், இடர்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடே பஞ்சமி வாராஹி வழிபாடு. 

ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் பஞ்சமி!

அம்பிகையை அந்தாதியில் போற்றி பாடும் அபிராமி பட்டர்  அன்னையின் வாராஹி வழிபாட்டை யும் கொண்டாடுகிறார்.  வாராஹி  நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை .சப்த மாதர்கள் எழுவரில் வராஹியே விஷ்ணுவின் அம்சமாக சேனாதிபதியாக திகழ்கிறாள்.

ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் பஞ்சமி!

இந்த நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலேயே விளக்கேற்றி விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டுதல்கள் நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் அம்மனை ஆராதிக்கலாம். வழக்கமான பூஜைக்கு பின் பச்சை கற்பூரம் கலந்த பால் அல்லது இயன்ற நைவேத்தியம் வைத்து தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தந்து நம் வாழ்வை இனிமையாகவும், வளமாகவும் ஆக்குவாள் வாராஹி.

மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி . மேலும் இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web