தைப்பொங்கல்.. முகூர்த்த நாட்கள்.. கதறும் பொதுமக்கள்! மல்லிகை கிலோ 4,000 ரூபாய்.. எகிறும் பூக்களின் விலை!

 
பூ மார்க்கெட் மலர் சந்தை

தமிழகம் முழுவதும், விழாக்காலங்களும் முகூர்த்த நாட்களும் தொடங்கி விட்டது இன்று போகி, நாளை பொங்கல் நாளை மறுநாள் உழவர் திருநாள், அத்தோடு மார்கழி கழிந்து தை பிறந்துவிட்டது இந்நிலையில் பூக்களின் விலை தாறுமாறாக ஏறி தலை சுற்ற வைக்கிறது.

பூ மார்க்கெட் மலர் சந்தை பூக்கடை மாலை ரோஜா

கடும் பனிப்பொழிவால் பூச்செடிகளில் அரும்புகள் எடுப்பது குறைந்ததால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை மேலும் உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, விருதுநகர் மாவட் டம், அருப்புக்கோட்டை, மதுரை பூ மார்க்கெட்களில் ஒரு கிலோ மல்லிகை 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் உசிலம்பட்டி சந்தையில் ரூபாய் 2500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மல்லிப்பூ மல்லிகை மல்லி செடி

பிச்சிப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி கிலோ 350 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் மற்ற நாட்களிலும் விழாக்கள் களைகட்டும் என்பதால், பூக்கள் விலை அடுத்த 3 நாட்களுக்கு இதே அளவில் தான் விலை நீடிக்கும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web