தரைதட்டி நின்றது பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ்!

 
கங்காவிலாஸ்

உத்தர மாநில பிரதேசம் வாரணாசியிலிருந்து, அசாம் மாநிலம் திப்ரூகருக்கு 'கங்கா விலாஸ்' என்ற, உலகிலேயே மிக நீளமான, மூன்றடுக்கு சொகுசு கப்பலின் சேவையை, பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி துவக்கி வைத்தார்.

இந்த கப்பல் உ.பி., பீகார், ஜார்கண்ட் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் சென்று, அங்கிருந்து பிரம்மபுத்ரா நதி வழியாக, அசாம் மாநிலம் திப்ரூகரை, 51 நாளில் சென்றடையும்.  இந்தியாவின் நதிக்கரையோரங்களில் அமைந்துள்ளது

கங்காவிலாஸ்

பாரம்பரிய, வரலாற்று சின்னங்கள், நகரங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகை யில், இந்த கப்பல் பயணம் அமைந்துள்ளது.  இந்நிலையில், பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில், கங்கை ஆற்றில் நேற்று சென்று கொண்டிருந்த கப்பல், ஆற்றில் நீர் குறைந்ததால், ஆழமின்றி தரைதட்டி நின்றது.  கப்பலில் இருந்த பயணிகள், சாப்ராவில் உள்ள தொல் பொருள் ஆய்வு நகரமான சிராங்கை பார்வையிட்டனர்.

கங்காவிலாஸ்

தகவல் அறிந்து, மாநில பேரிடர் மீட்பு படையினர், கங்கா விலாஸ் கப் பல் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சென்று, வேறு படகுகளில் பயணிகளை பாதுகாப்பாக, சிராங் நகருக்கு அழைத்து சென்றனர்.  கங்கா விலாஸ் கப்பலை, சிராங் கரைக்கு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web