மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்!! சோஷியல் மீடியா பிரபலம் உயிரிழப்பு!!

 
ரோஹித்

வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் ரவுடி பாட்டீ எனப்படும் ரோஹித் பாட்டீ. இவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் நேற்று நவம்பர் 21ம் தேதி திங்கட்கிழமை காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் சென்ற அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரோஹித் பாட்டீ


ரோஹித், புலந்த்ஷாஹரில் வசித்து வருபவர். அடிக்கடி கிரேட்டர் நொய்டாவின் சி செக்டருக்கு சென்று வருவது வழக்கம். குஜார் சமூகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மிகவும்  பிரபலமானவர். இவரின் வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கில் பாலோயர்கள் உள்ளனர். "நேற்று இரவு ரோஹித் நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  சுகாத்பூர் சுரங்கப்பாதை அருகே  அதி வேகமாக வந்த அவர்களது கார் திருப்பத்தை கவனிக்காமல் மரத்தில் மோதியது" என உள்ளூர் போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில் காரை  ஓட்டி வந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  காரின் பின்னால்  அமர்ந்திருந்த அவரது நண்பர்கள் மனோஜ் மற்றும் அதிஷ் காயங்களுடன், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்து உயர் சிகிச்சைக்காக  டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

rip

ரோஹித் உயிரிழந்த தகவல் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதும் உடனடியாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவருக்கு இரங்கல் செய்தியை பதிவிட்டனர். மேலும் பல ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த நேரில் விரைந்தனர். அங்கு கலந்து கொண்டவர்கள்  இறுதிச் சடங்குகளின் ரீல்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web