கிரேன் விழுந்து பெரும் விபத்து! பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு! சரியில்லாத சாலை.. ஆபரேட்டரிடம் விசாரணை!

 
கிரேன்

கோயில் திருவிழாக்களை நடத்தும் ஏற்பாட்டாளர்கள், அதிகளவில் பக்தர்கள் கூடும் போது, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மறந்து விடுகிறார்கள். கோவில் தேர் திருவிழாக்களில் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்தும், இது குறித்து மக்களிடையே இன்னும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்தரத்தில் தொங்கிய படி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார்.

kiren

மேலும் கோவிலுக்கு வந்திருந்த கூலி தொழிலாளி முத்து (42 ), கீழ்ஆவதம் பூபாலன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 4ஆக அதிகரித்துள்ளது.  85 வயதான சின்னசாமி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


விபத்து குறித்த தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை சரியில்லாத காரணத்தால் இந்த விபத்து நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நடைபெறாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். இது போன்ற விழாக்களுக்கு மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்ற முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web