கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து கோர விபத்து! ப்ளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் பலி! 9 பேர் காயம்!

 
கிரேன்

அம்மன் கோவில் திருவிழாவில், ராட்சத கிரேன் கவிழ்ந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், ப்ளஸ் 2 மாணவர் உட்பட பரிதாபமாக 3 பேர் பலியானார்கள். கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், உடல் நசுங்கி மூவரும் பலியானார்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே, கீழ்வீதி கிராமத்தில் உள்ள மண்டியம்மன் கோவில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில், நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாமிக்கு மாலை அணிவிக்க, பக்தர்கள் கிரேனில் தொங்கி வந்தவாறு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், கிரேனில் அந்தரத்தில் தொங்கிய படி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவர் ஜோதி பாபு (19) கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் கிரேனுக்கு அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துகுமார் (39) என்பவரும் உயிர் இழந்தார். அது மட்டுமின்றி அருகே ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த கீழ்ஆவதம் பூபாலன் (40) என்பவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Nemili

இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web