அந்த மனசு தான் கடவுள்.. அந்தரத்தில் ஏறி.. உயிரை பணயம் வைத்து போலீசார் செய்த நெகிழ்ச்சியான செயல்!

 
காகம்

கர்நாடகாவில் கயிற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை, தன் உயிரை பணயம் வைத்து போக்குவரத்து காவலர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.

காகம்

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், ராஜாஜி நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் அதிகாரியாக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30-ம் தேதி தனது பணியை வழக்கமாக மேற்கொண்டு இருந்தார். 

அப்போது, அங்கிருக்கும் பிரம்மாண்ட விளம்பர பதாகையின் கட்டமைப்பிற்குள், காகம் ஒன்று கால்களில் கயிறு மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் தவித்தது. மேலும், அந்த காகம் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட காரணத்தால் பறக்க முடியவில்லை. இதனைக்கண்ட காவலர் சுரேஷ், சவால்கள் நிறைந்த கம்பி மேல் ஏறி சென்று காகத்தை விடுவித்தார். 


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இதனை பெங்களூர் மேற்கு நகர கூடுதல் காவல் ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!