விபரீதத்தில் முடிந்த திருவிழா! கழுத்து அறுபட்டு 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி! 176 பேர் படுகாயம்!

 
பட்டம்

குஜராத்தில் பட்டம் விடும் திருவிழாவின் போது, மாஞ்சா நூல் பட்டு, கழுத்தறுப்பட்ட நிலையில், 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானார்கள். 176 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தை மாதப் பிறப்பின் போது உத்தராயணம் திருநாளைக் கொண்டாட குஜராத் மக்கள் பட்டம் விடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். நாம், தமிழகத்தில் 4 நாட்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது போல அவர்கள் உத்தராயணம் திருநாளை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தானில் மகர சங்ராந்தி என்ற பெயரில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடுகின்றனர்.

குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகின்றது. குளிா்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்குவதையும், அறுவடை காலத்தை கொண்டாடும் விதமாகவும் உத்தராயணம் (தை மாதப் பிறப்பு) திருநாளைக் கொண்டாடுவா்.

Kite

மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து வானில் பட்டத்தை பறக்க விட்டு உத்தராயணம் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு உத்தராயணம் திருநாள், குஜராத் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை பட்டம் விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர்.

இந்த நாளில் குஜராத் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் குஜராத் பகுதிக்கு வந்து பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் வார இறுதி நாள் என்பதால் தங்களது வீடுகளின் மாடிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

gujarat

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்று கொன்டிருந்த 4 குழந்தைகள் உள்பட 11 போ் பட்டங்களின் மாஞ்சா நூல் கழுத்தில் பட்டு, அறுத்து பலியாகினர் மற்றும் 130 போ் காயமடைந்தனர். பட்டம் விடும் போது உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்து 46 பேரும் காயமடைந்தனர். இதில் அதிகபட்சமாக அகமதாபாதில் மட்டும் நூல் அறுத்து 59 பேரும், தவறி விழுந்து 10 பேரும் காயமடைந்துள்ளனா்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web