2023 வருஷத்தில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 4ம் தேதி தொடக்கம்!

 
முதல்வர்

2023 புது வருஷத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 4ம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில், விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் விடுமுறை கழித்து தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

சட்டப்பேரவை

இந்நிலையில், தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் ஜனவரி 4ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர், தமிழக அமைச்சர்கள் மற்றும் முதன் முறையாக புதியதாக பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

ஒவ்வொரு வருடமும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆளுநர் உரையில் அடுத்த ஆண்டில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறுவது வழக்கம்.  இந்த கூட்டத்தொடரில்  புதிய சட்ட மசோதாக்கள், துறைகள் மாற்றப்பட்டு புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும்  ஆலோசிக்கபடலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web