ஊட்டியை உறைய வைத்த உறைபனி!! மினி காஷ்மீராய் வெண்பட்டு கம்பளம் விரித்த புல்வெளிகள்!!

 
ஊட்டி உறைபனி

மார்கழி மாதம் பொதுவாகவே குளிரும் பனியும் வாட்டியெடுக்கும்.சாதாரணமாகவே பனிகொட்டும் ஊட்டியில் நடப்பாண்டில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதிகளில் "0" டிகிரி செல்சியஸ். கடும் உறைபனி. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டத்தில் பனிக்காலம் என்ற போதிலும் நடப்பாண்டில் காலநிலை மாறுபாடுகளால் உறைபனிக்காலமாக மாறியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு  தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை அனைத்துமே மிக தாமதாகவே தொடங்கின.

ஊட்டி உறைபனி

நவம்பர் 22ல் தமிழகத்தை தாக்கிய மாண்டஸ் புயலால் உறைபனி காலம் தள்ளிப் போய்விட்டது. இதனையடுத்து தற்போது கடந்த சில நாட்களாகவே  ஊட்டியில் மறுபடியும் உறைபனியின் தாக்கம் நிலவி வருகிறது.  ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், ரேஸ்கோர்ஸ்  பகுதிகளில்  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டிக் கிடக்கிறது. கடந்த வாரம் முதலே  பகல் நேரங்களில் வெயில் அதிகரித்தும் இரவில் கடுங்குளிரும் ஆரம்பித்து விட்டது.  பச்சை புல்வெளிகள் எங்கும் வெண்பட்டு கம்பளம் போல் உறைபனிப்பொழிவு. மாலை 3 மணிக்கு தொடங்கும் நடுக்கும் குளிர் அதிகாலை 9 மணி வரைக்கும் நீடிக்கிறது. 

ஊட்டி உறைபனி
 கொட்டும் பனியிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. இன்றைய தினம் உறைபனி, 2 டிகிரி செல்சியஸ்.  புல்வெளிகள், மரம், செடி, கொடிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் என அனைத்தின் மீதும் பனிக்கட்டியே. ஊட்டியே, ஒரு "மினி காஷ்மீர்" போல காணப்படுகிறது.
கடும் உறைபனியால்  வாகனங்களில் டீசல் உறைந்து போய்விடுவதால், காலை வேளையில், வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். இம்மாதம் இறுதிவரை  இப்பனி பொழிவு இப்படியேதான் அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web