பாதியில் வெளியேறிய ஆளுநர்!!சட்டப்பேரவையில் பரபரப்பு!!

 
முதல்வர், ஆளுநர்

இன்று ஜனவரி 9ம் தேதி நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  நடத்தப்பட்டது.  வருடத்தின்  முதல் கூட்டத்தொடர் எப்போதும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.  இதில் மக்கள் நலத்திட்டங்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இன்றும் வழக்கம் போல் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையாற்றினார். இந்த சமயத்தில், ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் சட்டசபையில் எழுப்பப்பட்டன.

சட்டசபை ஸ்டாலின் முதல்வர்

இதனையடுத்து  திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆளுநர்  தொடர்ந்து உரையாற்றி தனது உரையை நிறைவு செய்தார்.எப்போதும் அரசு தயாரிக்கும் உரையை தான் மாநில ஆளுநர்கள் படிப்பதும் வழமையான ஆன ஒன்று ஆனால் இந்த உரையில்  தமிழக அரசு தயாரித்ததை ஆளுனர் முறையாக படிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. திராவிட மாடல் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துவிட்டார்.  அத்துடன் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்த போதே அவரை கண்டித்த முதல்வர் பேசியதால் ஆளுநர் வெளியேறினார்.

சட்டசபை

அரசு தயாரித்த ஆளுநர் உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய  வேண்டும் என முதல்வர் பேசினார். இது குறித்த சில விமர்சனங்களை முதல்வர் முன்வைத்து பேசிய போது ஆளுநர் பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார் .ஆளுநர் வெளியேறும் போது வாழ்க தமிழ்நாடு என திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.  தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை. ஆளுநருக்கு முழு மரியாதை கொடுத்து கண்ணியத்தோடு நடந்து கொண்டோம் எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு ஜனவரி 13ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடரும் என அறிவித்தார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web