கழுதை குட்டியை திருமண பரிசாக அளித்த மணமகன்!! வியப்பூட்டும் காரணம்!! வைரலாகும் வீடியோ!!

 
வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா

திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மண மக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்குவர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்தின் போது மணமக்களே தங்களுக்குள் பரிசுகள் வழங்கிக்கொள்வது ட்ரெண்ட் ஆகி விட்டது. அதிலும் சிலர் தனித்துவமான வித்தியாசமான பரிசுகளை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்துக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பிரபல யூ-ட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அஸ்லான் ஷா தனது மனைவிக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை, இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பகிர்ந்த ஷா, தனது தனித்துவமான பரிசுக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அதில், கழுதைக் குட்டிகள் வாரிஷாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் என் தரப்பிலிருந்து அவளுக்கு இந்த திருமண பரிசு" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்த கழுதை குட்டி அதன் தாயிடமிருந்து பிரிக்கப்படவில்லை. அதன் தாயையும் சேர்த்தே அழைத்துவரப்பட்டுள்ளது என்று அவர்   விளக்கம் கொடுத்துள்ளார். அஸ்லான் ஷாவின் இந்த பரிசு வாரிஷாவுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அவர் கழுதை குட்டியை ஆரத்தழுவி, நெற்றியில் தடவிக்கொடுக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு கழுதையைக் கொண்டு வந்து தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய வீடியோவையும் அஸ்லான் ஷா பகிர்ந்துள்ளார்.   மணமகனின் கழுதை குட்டி பரிசை கண்டு இணையத்தில் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web