தொடரும் கொடூரம்!! ரயில் நிலையத்தில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

 
பாலியல்

வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் குறிப்பாக பாலியல் வன்முறைகள் பொதுஇடங்களில் அதிகரித்து வருகின்றன. ஒடிசாவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் ரயில் நிலையத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

ஒடிசா மாநிலம் பாட்டியா ரயில் நிலையத்திற்கு அருகில் சேரிப்பகுதிகளில் வசித்து வரும் 12 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் மர்ம நபர்களால்  ஜனவரி 16ம் தேதி இரவு கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி வைத்து இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்முறை  நடத்தப்பட்டது. சிறுமிகள் வலியால் கதறியும் விடவில்லை. அடுத்த காலை தான் சிறுமிகளை விடுவித்தனர். அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ்

அந்த சிறுமிகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவர்களுக்கு குழந்தைகள் நல நிபுணர் ஆலோசனை வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ஆரோக்கியம் குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சைல்டு லைன் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அவர்களை கைது செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்ததால் சிறுமிகள் இருவரும் மிரட்சியாக காணப்படுவதால் கவுன்சிலிங் அளிக்கவும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தை மூடிமறைக்க குற்றவாளிகள் பணம் கூட வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web